PRIYA - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  PRIYA
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  12-Jun-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jan-2012
பார்த்தவர்கள்:  2600
புள்ளி:  783

என்னைப் பற்றி...

நிகழ்காலத்தில்
நிஜத்தை தேடும்,
ஒரு சராசரி
தமிழ் பெண்...

என் படைப்புகள்
PRIYA செய்திகள்
PRIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2018 4:54 pm

அடிப்படை
தேவைகள்
தீர்ந்த பின்னும்
போதுமென
நில்லாது
அலைகிறது
அலையென
அலைகளால்
அடங்கிய
அபூர்வ மனது

அடக்க தெரியாமல்
எனை அடங்கி
நிமிர்கிறது
அசுர மனது

காலங்களினால்
பின்னபட்ட
சிலந்தி வலையில்
வாழ்வினை
இழந்தபடி
உயிர் மட்டும்
சுமந்தபடி
சுற்றி
திரியுதடி
பாவப்பட்ட
பெண்ணடி...
அவள் ஓர்
பாவப்பட்ட
பெண்ணடி....

-PRIYA

மேலும்

PRIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2018 4:43 pm

உலோகமில்லாது
வடிவமில்லாது
செதுக்கப்பட்ட
மனதின்
மகிழ்வு
உதடுகளின்
விரிவு
புன்னகை

-PRIYA

மேலும்

PRIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2015 12:46 am

சிந்தனைகள் சிதறுவதால்
சிற்பங்கள் சிதைகின்றன....

சரிகள் சறுக்குவதால்
பிழைகள் பிறக்கின்றன....

தவறுகள் சரிகளின்
எதிரியல்ல,
ஆசான்.
ஒவ்வொரு தவறும்
சரிகளை பார்த்தே
சரி செய்யபடுகிறது

சரிகள் பாடமாகின்றன
தவறுகள் அனுபவமாகின்றன

இன்று தவறெனபடுவது
நாளை சரியாவதும்
இன்று சரியெனபடுவது
நாளை தவறாவதும்
காலமாற்றத்தினால்
காலாவதியாகும் முடிவுகள்.

ஏனெனில் சரியெல்லாம் சரியுமல்ல
தவறெல்லாம் தவறும் அல்ல...


--PRIYA

மேலும்

சரியும் தவறும் சிந்தனைகளின் சிதறல்களால் சிதைபவை !! 01-Sep-2015 5:03 pm
இன்று தவறெனபடுவது நாளை சரியாவதும் இன்று சரியெனபடுவது நாளை தவறாவதும் .. அருமையான வரிகள் .... 25-Aug-2015 8:22 am
வாழ்க்கையின் சாரம் சரமாய் , வரிகளில் தரமாய் !! வாழ்த்துக்கள் ! 23-Aug-2015 7:45 am
தத்துவம் கற்கும் பட்டறை உங்கள் கவி 23-Aug-2015 12:59 am
PRIYA அளித்த படைப்பில் (public) vendraan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Dec-2014 9:24 pm

நீண்ட நாளாக இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியவில்லை ச்ச்சே....என்னடா இது ரொம்ப வருத்தமாக இருந்தது செல்விக்கு.

செல்வி பத்தாம் வகுப்பு படிக்கும் பருவப்பெண். இந்த வயதில் இதுபோன்ற ஆசைகள் எழுவது இயற்கைதான்.முழு ஆண்டு தேர்வு வருவதற்குள் எப்படியாவது இந்த ஆசையை நிறைவேற்றிட வேண்டும் என அதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

செல்வியின் அம்மா கொஞ்சம் கண்டிப்பானவர் அதனால் அவளிடம் சொல்ல பயந்தாள், பல திரைபடபாடல்களில் இவளது நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிகொண்டிருப்பர் அரைகுறை ஆடைகளில் கதாநாயகிகள்.என்ன செய்ய பெருமூச்சுடன் பார்த்தது தான் மிச்சம் .

அவளின் தோழி வள்ளி இவளது ஆசையை

மேலும்

கதை நன்று! வாழ்த்துக்கள் தோழியே! 11-Feb-2015 1:29 am
ம் நல்லாருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 11-Feb-2015 1:02 am
முதன் முதலில் 'அ" போடும் போது சரியாக வராது சிறிது கோணல் மாணல் தான். இது எனது முதல் சிறுகதை பல பிழைகள் பல தவறுகள் இருந்தாலும் அதையெல்லாம் பொறுத்து சகித்து ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்துரைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பொள்ளாச்சி அபி சார் முதல் கவிதைக்கு ஊக்கம் அளித்த தாங்களே முதல் கதைக்கும் வந்து கருத்துகள் பதிந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 21-Dec-2014 9:23 am
சிறுகதை தொடர்ந்து எழுதி வந்தால் நல்ல பயிற்சியும் கிட்டும் தங்களுக்கு இதுபோன்ற நல்ல கதைகளும் கிட்டு எங்களுக்கு. (அது சரி அது எப்புடீ சொந்த அனுபவத்தையே அப்புடியே சிறுகதையா எழுதிப்புட்டீக? யார்கிட்டயும் ரீசென்டா அடி/திட்டு வாங்கினீயளாக்கும்... அதாங் பழைய ஞாபங்கள் அப்படியே கதையா வந்திடுச்சு.... சூப்பர்...சுப்ப்பர்... 19-Dec-2014 5:30 pm
PRIYA அளித்த படைப்பில் (public) மங்காத்தா மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Oct-2014 10:37 pm

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
மஞ்சள் தாலி சுமந்த நாள் முதலாய்.....

பட்டாம்பூச்சி வாழ்க்கையிங்கு
பணிதேனி வாழ்வானது

பொறுப்பின்றி கழிந்த நாட்களது
கடமைகளை சுமந்து எதிர் நாட்கள்

அலுவலகத்தை அரை நாள் சுமக்க
அடுக்களையை கால் நாள் சுமக்க
அன்பானவனை மீதி நாள் சுமக்க
சுமைதாங்கியாய் ஒரு நாள் மட்டும் அல்ல
ஒவ்வொருநாளும்......

கவிதையே உலகமென
கழிந்த நாட்கள் அன்று
கவிதை என்ற வார்த்தையே
மறந்து போகுதே இன்று...

மின்னலென வந்து போகும்
கவிதை வரிகள்....

சன்னலோர பேருந்து பயணங்களில்
உச்சி வெயிலில் ஒற்றை மரத்தடியில்
பசியில் உறங்கிகொண்டிருக்கும்
தேகம் மெலிந்த மூதாட்டியை

மேலும்

இக்கவிதைக்கு கருத்துகள் வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி... 21-Dec-2014 9:15 am
அய்ங் .. இதுக்குத்தெங் சொல்ரது நேரங்கிடைக்கும்போதே எழுதித் தள்ளிப்புடணுமின்னு... இப்பவும் ஒண்ணும் கொறஞ்சி போயிடல... எழுதும்போது எழுதுங்க... எழுத்துல ஒரு மிளிரல் இருக்குதுல்லா.... 19-Dec-2014 5:33 pm
கவிதயின் மூலம் தங்களின் கவி ஏக்கம் புரிகிறது தோழி.......தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள் வாழ்த்துக்கள் தோழி..! 09-Dec-2014 11:00 am
"பரிதாபத்தில் வெறுப்பில் கோபத்தில் மின்னல் போல வந்து செல்லும் வார்த்தைகள்.... நின்று நிதானித்து சிந்தித்து எழுத கூட நேரம் ஒதுக்க இயலாது ஓடுகிறேன்... ஓடுகிறேன்... ஓடுகிறேன்... மனைவி எனும் பொறுப்போடும் அரசாங்க ஊழியர் என்ற பதவியோடும்...... !" ---- இன்னும் உங்களுக்கு பொறுப்புகள் கூடும்.பொறுமையாய் நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் பிரியா.தளத்திற்குள் நுழைய நேரம் கிடைக்காதபோது தோன்றுவதையெல்லாம், ஒரு நோட்டில் பதிவு செய்யுங்கள்.அல்லது அலைபேசியில் பேசி பதிவு செய்யுங்கள். பின்னர் அதனை எழுத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதுவரை வரமுடியவில்லையே,எழுத முடியவில்லையே என்று கவலைகள் வேண்டாம்..! காரணம்.. தமிழ்நாட்டில் இதுவரை எழுதப் பட்டுள்ள "கவிதைகளை" விட..."கவிஞர்கள்" அதிகமாகத்தான் இருக்கிறோம்..! ஹி..ஹி..! 08-Dec-2014 9:54 pm
ப்ரியா அளித்த படைப்பில் (public) priyaram மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2014 2:30 pm

மாண்டுபோகும் மனிதம்---ப்ரியா

அளவில்லாமல் குடித்து
போதை தலைக்கேறி
மகளென்று அறிந்தும்
கண்ணில் காமத்தீ பற்றியெரிய
பெற்ற மகளையே சீரழிக்கும்
தந்தை என்ற மிருகம்
ஒருபுறம்......!!!

அளவுக்கதிகமான அலுவலகப்பணி
பெண்ணாக இருந்தும்
தைரியமாய் அமர்ந்து
பணிமுடித்து காலதாமதமாய்
செல்பவளின்
கற்பை சூறையாடும்
உயரதிகாரி என்ற கயவன்
மறுபுறம்.....!!!

கையில் பாடப்புத்தகத்துடன்
கல்வி கற்க செல்லும் பெண்
மாலைவேளையில்
சிறப்பு வகுப்பு என்ற
பெயரில் பாடம் நடத்திவிட்டு
பூ போன்ற மென்மையான
பெண்ணை வன்மையான
முறையில் வேட்டையாடும்
ஓநாய்க்கூட்டம்
ஒரு பக்கம்.....!!!

கள்ளகபடமில்லா

மேலும்

ம்ம்.....தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.....!! 18-Feb-2016 10:09 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே........ 18-Feb-2016 10:08 am
நாட்டுக்கு தேவையான பாடல் ... அருமையான தொகுப்பு .. நாச கொடூரர்கள் அழியட்டும் 17-Feb-2016 11:32 pm
மனதை உருக்கி எடுக்கும் கவிதை. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும் கவிதாயினிகளைப் பார்த்து சந்தோசமாக இருக்கிறது. இத்தனை தடைகளைக் கடந்து வந்து சாதித்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற பெண் இனச் சகோதரிகளுக்கும், இந்த கவிதைக்கும் வாழ்த்துகள் . 29-Nov-2015 8:58 am
நிஷா அளித்த படைப்பில் (public) மங்காத்தா மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Nov-2014 7:38 pm

(மு.குறிப்பு....தோழி பிரியாவின் மாண்டு போன மனிதம் கவிதை ஏற்படுத்திய தாக்கத்தால் நான் படைத்த ஒரு சிறு கவி...பெண் சுதந்திரம் ??????....பிரியா அவர்கள் கவிதையின் படமே இங்கு நானும் இணைத்துள்ளேன்....நன்றி தோழி)


சிதறும் சில
நட்சத்திரங்களை
சீண்டிப்
பார்த்ததுண்டா..?

சுடுகின்ற சூரியனை
ஒருமுறையாவது
தொட்டுப்
பார்த்ததுண்டா...?

சிட்டிகையில்
உப்பெடுத்து
சிரித்து சிரித்து
உண்டதுண்டா..?

சர்க்கரையில்
சாறெடுத்து
அமிர்தம் என்று
அள்ளி குடித்ததுண்டா..?

விழிவடித்த
கண்ணீரை
கண்ணுக்குள் திருப்பி
அனுப்பியதுண்டா..?

வெள்ளைச்சேலை
விதவையை வாசல் நிறுத்தி
வெளியேறி
சென்றதுண்டா.?

சுவாசி

மேலும்

சிறப்பு 23-Dec-2014 2:22 pm
அன்புத் தோழி பிரியாவிற்கு. .....என் தோழி பிபிரியாவின் படைப்பான மாண்டு போன மனிதம் கவிதை பார்த்து அதன் தாக்கத்தால் நாநான் எழுதிய கவிதை இது...இதில் பெண்ணியம் அடிபடுகிறது என்று நீநீங்கள் நினைக்கிறீர்கள். ....ஆனால் நம்மை இச்சமுதாயம் எந்நிலையில் வைத்துள்ளது என்பதாகவே எனக்கு தோன்றுகிறது...படத்தை பார்த்தே நம் இதயம் வலிக்கிறதே ....தோழி பிரியாவின் கவிதையை பாருங்கள்.வலிகள் நிறைந்த அத்தனையைம் உண்மை சம்பவம் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். ...நீங்கள் நினைப்பது போல் பெண் இன்று சுசுதந்திரம் பெற்றதாக வெளியில் பேசிக் கொள்ளலாம். .உண்மையில் மனதை தொட்டு பாருங்கள்...எந்த பெண் உண்மையான சுதந்திரம் அனுபவிக்கிறாள்.... எத்தனையோ பெண்கள் வேலைக்கும் போய் கொண்டு வீட்டிலும் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்....கொத்தடிமை வாழ்க்கை வாழும் பெபெண்கள் இல்லை என நினைக்கிறீர்களா. ..மாற வேண்டியது சமுதாயம். ...பெண்கள் கிராமப்புறங்களில் இன்றும் எத்தனையோ சித்திரவதைகளை அனுபவித்து தன் வாழ்க்கையை உருக்கிக் கொண்டிருக்கிறார்கள்...இந்த படம் தோழி எங்கிருந்து எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ..ஆனால் இதைப் பார்த்ததும் எனது மனதில் தோன்றிய வரிகளே இக்கவிதை....தோழி நான் ஆணாதிக்கத்தை அங்கீகரிப்பவள் இல்லை...எத்தனையோ பெண்களை அவர்கள் நிலையை பார்த்து கண்ணீர் வடிப்பவளே.....ஏனோ எங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் எங்களை அழ வைக்கிறது தோழி....நீங்கள் உண்மையான பெண் சுதந்திரம் அனுபவிப்பவராக இருந்தால் அதற்கு மிகவும் மகிழ்கிறேன். ..நன்றி 21-Dec-2014 11:38 am
வணக்கம் நிஷா.... இது மாதிரியான புகைப்படம் எல்லாம் எங்க இருந்து எடுகிரிங்க....? உங்களது தோழி இப்படி ஒரு புகைப்படம் போடும் போது அதை தடுக்க வேண்டுமே தவிர மாறாக அதை ஆதரிக்கலம்மா...? பெண் கொடுமை முற்றிலும் அழியவில்லை உண்மைதான் ஆனால் 1950 வாழ்ந்த பெண்களுக்கும் 2014 வாழும் நமக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? நிஷாம்மா. பெண்கள் சாதிக்காத துறையே இல்லை. பெண்கள் சுதந்திரத்தை பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பேசியுள்ளனர்.மகாகவி சுப்பிரமணி பாரதி, பாரதிதாசன்,தந்தை பெரியார், மகாத்மா காந்தி.. இப்படி சொல்லிகொண்டே போகலாம், ஆண்களின் துணை இல்லாமல் பெண் சுதந்திரம் என்பது சாத்தியம் இல்லை. பெண்களின் திறமைகளை பற்றி பாடுங்கள், பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் வார்த்தைகளை சேருங்கள். அதை விடுத்து இப்படி சுடர்விடும் மெழுகுவர்த்திக்கு சுதந்திரமாய் சாவு உண்டா இந்த வார்த்தைகள் எல்லாம் ஒரு பெண்ணிற்கு எப்படி தைரியத்தை அளிக்கும். ஆண்கள் அடிக்க பெண்கள் மிதிபடுவதை எத்தனை காலத்திற்குத்தான் காட்ட போறீங்க நிஷம்மா. எந்த காலத்திலும் பெண்களுக்கு விடியல் வராது என்ற இதுபோன்ற எதிர்மறை எண்ணம் கொண்ட கவிதைகளை தயவு செய்து இனி இங்கு பதியாதீர்கள். பெண்ணியவாதியான என்னால் பொறுக்க இயலவில்லை. பெண்ணியம் பேசவேண்டிய பெண்ணே... பெண்ணுக்கு எதிரான குற்றங்களை களைய வேண்டிய பெண்ணே .... பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் விந்தைகள் செய்ய வேண்டிய பெண்ணே நீ சோர்ந்து போய் சொக்கி நின்றால் ஆண்கள் என்ன இந்த உலகமே காலால் மிதிக்குமடி தங்க பெண்ணே........ 21-Dec-2014 8:48 am
கருத்து சுத்தந்திரம் எனும் போர்வையில் பெண்களை கொடுமை செய்யும் இதுபோன்ற படங்கலை சித்தரிப்பதே பெண்களின் பாதுகாப்புக்கு எதிரானது. வலுக்கட்டாயமாக நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு உடனடியாக படத்தை நீக்கப் பரிந்துரை செய்கிறேன். மேலும் தளம் இது போன்ற படங்களை பார்வையிட்டு உரிய முன் நடவடிக்கைகளை அவை பதிவேற்றம் ஆகும் முன்பே செய்வது காலத்தின் கட்டாயம். மேதாவிக் கருத்து நியாய வாதங்கள தவிர்க்கப்பட வேண்டும்.... இந்த படத்திற்கான ஆதரவு கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன். 19-Dec-2014 5:17 pm
PRIYA - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 9:24 pm

நீண்ட நாளாக இந்த சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியவில்லை ச்ச்சே....என்னடா இது ரொம்ப வருத்தமாக இருந்தது செல்விக்கு.

செல்வி பத்தாம் வகுப்பு படிக்கும் பருவப்பெண். இந்த வயதில் இதுபோன்ற ஆசைகள் எழுவது இயற்கைதான்.முழு ஆண்டு தேர்வு வருவதற்குள் எப்படியாவது இந்த ஆசையை நிறைவேற்றிட வேண்டும் என அதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

செல்வியின் அம்மா கொஞ்சம் கண்டிப்பானவர் அதனால் அவளிடம் சொல்ல பயந்தாள், பல திரைபடபாடல்களில் இவளது நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிகொண்டிருப்பர் அரைகுறை ஆடைகளில் கதாநாயகிகள்.என்ன செய்ய பெருமூச்சுடன் பார்த்தது தான் மிச்சம் .

அவளின் தோழி வள்ளி இவளது ஆசையை

மேலும்

கதை நன்று! வாழ்த்துக்கள் தோழியே! 11-Feb-2015 1:29 am
ம் நல்லாருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 11-Feb-2015 1:02 am
முதன் முதலில் 'அ" போடும் போது சரியாக வராது சிறிது கோணல் மாணல் தான். இது எனது முதல் சிறுகதை பல பிழைகள் பல தவறுகள் இருந்தாலும் அதையெல்லாம் பொறுத்து சகித்து ஊக்கம் அளிக்கும் வகையில் கருத்துரைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பொள்ளாச்சி அபி சார் முதல் கவிதைக்கு ஊக்கம் அளித்த தாங்களே முதல் கதைக்கும் வந்து கருத்துகள் பதிந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 21-Dec-2014 9:23 am
சிறுகதை தொடர்ந்து எழுதி வந்தால் நல்ல பயிற்சியும் கிட்டும் தங்களுக்கு இதுபோன்ற நல்ல கதைகளும் கிட்டு எங்களுக்கு. (அது சரி அது எப்புடீ சொந்த அனுபவத்தையே அப்புடியே சிறுகதையா எழுதிப்புட்டீக? யார்கிட்டயும் ரீசென்டா அடி/திட்டு வாங்கினீயளாக்கும்... அதாங் பழைய ஞாபங்கள் அப்படியே கதையா வந்திடுச்சு.... சூப்பர்...சுப்ப்பர்... 19-Dec-2014 5:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (265)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

இந்துநேசன்

புதுக்கோட்டை
தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (265)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (265)

Baskaran Kannan

Baskaran Kannan

CHENNAI
B.PONNUDURAI

B.PONNUDURAI

GUMMIDIPOONDI (T.K)
மேலே